Thursday, August 4, 2011

சில வேடிக்கை மனிதர்கள்

மொழியானது தனது வாழ்நாளை நீட்டிக்கொள்ளவும், பலவகை பரிணாமங்களை எட்டவும்  உதவக்கூடிய  காரணிகளில் ஊடகமானது பெருவாரியான பொறுப்பினை ஏற்கிறது. உலகில் தளைத்தோங்கிய சில மொழிகளுக்கு இக்கருத்து ஒத்துப்போகும். அவ்வகையில் நம் தொன்மை பொருந்திய தமிழ் மொழியும் கடந்த மற்றும் நிகழும் நூற்றாண்டுகளில் ஊடகங்களின் துணை கொண்டு உறுவெடுத்ததைக் காணலாம் 21ம்  நூற்றாண்டில் காரைக்குடியில் வெளியான  குமரன் இதழ்  -(1930)-    முருகப்பா  எனும் ஆசிரயரால் வெளியடப்பட்டது. அவ்விதழ் சில எழுத்து சீர்திருத்தங்களுக்கு உதவின. 1935 ல் வெளியான குடியரசு மற்றும் விடுதலை இதழ்களில் ஆசிரியர் பெரியார் மற்றும் பட்டு மாணிக்கம் மூலமாக சில சீர்திருத்தங்கள் மொழியில் செய்யப்பட்டன. இம்முயற்சியே எழுத்து சீர்திருத்தத்தின் தொடக்கமாய் அமையப்பெற்றன. தற்காலத்தில் ஊடகத்தின் வளர்ச்சி பற்றி கூற வேண்டியதேயில்லை. ஆனால் ஊடகம் மொழிக்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் எடுக்கும் முயற்சிகள் குறைவே. மாறாக மொழியின்  அழிவிற்கும் வித்திடக்கூடிய அளவில்  செயல் படுகின்றன.
 ஆம் எழுத்து சீர்திருத்தவாதி பெரியார்  மற்றும் அண்ணாவின் வழி
வழி வந்த கலைஞர் இந்த செயலை செய்வது அருவருக்கசெய்கிறது    தற்போது வெளிவரும்  
 தி ரைசிங் சன் என்ற வார இதழ் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் வெளியாகும் தமிழக நாளிதழ்  திராவிட இயக்கத்தின் போர் வாள்  எனவும்  இது வர்ணிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் ஹிந்தி திணிப்பு,ஹிந்தி எதிர்ப்பு,ரயில்  மறியல், தண்டவாளத்தில் தலை வைத்தல்,போன்ற 
போன்ற உன்னத மொழி போராட்டங்கள் நிகழ்த்திய தலைவர்களுள் ஒருவரே இத்தகைய செயல்களை செய்வது குறிப்பிடத்தக்கது.  தமிழர் நலனுக்காகவும் தமிழின் வளர்ச்சிக்காகவும் அயராது உழைக்கும் இது போன்ற இதழ்கள் ஒருபுறம் இருக்க,
 கியோடோ  பல்கலைக்கழகம் ஜப்பான், லிதுர்நியா  பல்கலைக்கழகம்  ஹான்க் காங், லண்கச்ட்டர் பல்கலைக்கழகம் இங்கிலாந்து, இது போன்ற பலகலைக்கழகம் வழியாக பயிலும் ஆய்வு மாணவர்கள்,பேராசிரியர்கள்,முனைவர்கள்,மூலமாக கலாச்சாரம், அறிவியல், தொழில் உற்பத்தி, வேளாண்மை போன்ற கட்டுரைகள் தக்க ஆவணங்களுடன் சிறந்த முறையில் ஒளிபரப்ப படுகின்றன, உலக ஆராய்ச்சி நிறவனங்கள்,உலக பாதுகாப்பு அமைப்புகள் உதவிகொண்டு இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பினையும் திகைப்பூட்டும் உண்மைகளையும் தமிழின்  தெளிவான கலைச்சொல் வடிவத்துடன் நிகழ்சிகளாக தொகுத்து வழங்குகிறது.  இந்த வகையான  ஊடகங்கள்  நம் நாட்டையோ நம்   மாநிலத்தையோ  சேர்ந்தவை அல்ல .  இங்கில்லாந்து  மற்றும்   அமெரிக்க நாடுகளில்  இருந்து,  ஒளிபரப்பாகும்  தொலைகாட்சி  அலைவரிசைகள்
இவ்வகையான அலைவரிசைகளுக்கு இருக்கும் ஆர்வங்களும் முயற்சிகளும் தமிழ் மொழியின் கலைச்சொல் பயன்பாட்டிற்கும் எளிமையான கருத்து புரிதலுக்கும் துணை சேர்க்கிறது. ஆனால் திராவிட போர்வாள் போன்ற தறிகெட்ட இதழ்களால் மொழியானது சிதைகிறது இவ்விதமான சில வேடிக்கை மனிதர்கள் வீழ்வது எப்போது?

Friday, July 15, 2011

சாயம்போகும் கலைகள்

கலைஞனின் படைப்பானது அவன் சார்ந்திருக்கும் அல்லது அவனைச் சூழ்ந்திருக்கும் சூழலினை பதிவு செய்யும் விதமாக அவனுக்குள்ளாகவே உருவெடுக்கிறது. புறத்தூண்டல்கள் யாவும் அவனை படைப்பாளியாய் மாற்றும் படியான வேலைகளை செய்கிறது. அத்தகைய கலைஞன் காலந்தோறும் சூழலில் அமையும் மனிதர்களால் உற்றுநோக்க படுகிறானா? அவனது படைப்புகள் அங்கீகாரத்தினை ஏற்கின்றனவா? என்பதெல்லாம் கேள்விகளாகவே முடிவின்றி அமைகின்றன. காரணம், என்னவென்றால்  ஆரம்ப காலங்கள் முன் மொழிந்த ஐரோப்பிய இன வாதமே உலகின் தலை சிறந்த நாகரீகமாக இன்றளவும் கருதப்படுவது தான். பொதுவாக மேலைநாட்டு  கலைஞனின் படைப்பு பற்றி வியந்துரைக்கும் வேலைகளை தமிழக கலைஞர்களும் செய்வது வருத்தமடைய வைக்கிறது. அதே நேரங்களில் நம்மிடத்தே    அமையப்பெறும் கலைஞர்களின் பல அறிய படைப்புகள் பற்றி அக்கறை கொள்ளாமல் விடுவது கோபம் கொள்ளச்செய்கிறது. கீற்று எனும் இணையங்களிலும் விகடனிலும் உலாவரும் ஓவியர் ட்ராஸ்கி மருது இத்தகைய ஐரோப்பிய அக்கறை காட்டும் விதமான கட்டுரைகளை வெளியிடும் நிலையைக்
 காணக்கண்டேன்.தூரிகைதடங்கள் என்ற தலைப்பில்  யுஜின் டெலாக்ராய்க் (பிரான்ஸ்) கஷ்தவ் கொர்பர்ட் (பாரிஸ்) ஜூலியட் கொர்பர்ட் கஸ்டவ் க்ளிம்ப்ட் (வியன்னா) ஜாக் லூயிஸ் டேவிட் (பிரான்ஸ்)   போன்றோரின் படைப்புகள் பற்றியும் வாழ்க்கை வரலாறு பற்றியும் விளக்குகிறார் ஆனால் நெல்லை குமரி தஞ்சை திருச்சி ஆகிய
பெருநகரங்களில்
 குப்பை கொட்டும் வீதிச்சுவர்களில் கைவண்ணத்தை காட்டும் ஓவியங்களை கண்டேன். அவைகளின் நேர்த்தி பிற ஓவியங்களில் நான் கண்டதில்லை. பயன்படுத்தியிருக்கும் வண்ணங்கள் மூன்று வகை மட்டுமே தூரிகையாக பயன்படுத்திய கருவிகள் கொள்ளிக்கட்டையும் சுன்னக்கட்டிகளும் செங்கல்துண்டுக்களுமே. அருகில் விசாரித்ததில் அவ்வோவியன் முடிக்குள்  மறைந்த முகத்தினையும் அழுக்கேறிய ஆடைகளையும் கொண்டிருந்தானென முகவரி கொடுத்தனர். கீழ் காணும் ஓவியம் வடசேரியில் கிடைக்கபட்டது கடைசி ஓவியம் நெல்லையில் கிடைக்கபட்டது. மாருதி ஆர்ட்ஸ், விசன் ஆர்ட்ஸ் போன்ற நெல்லை ஓவியர்களிடம் விசாரித்ததில் அத்தகைய சித்திரத்தை கண்டு தாங்களும் வியந்ததாக கூறினர். நீரில் நிழலாடும் கரை விளிம்பு பகுதிகளை காட்டி இருப்பது அருமை கடைசி படத்தில் பின்புறமாக   நடந்து செல்லும் பெண்ணின் பூவினைக்காட்ட கலைஞன் சுவரை சுண்ணாம்பு சுவர்  வரும் வரை சுரண்டியிருக்கும்  விதம் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. இத்தகைய கலைஞர்கள்  ஏன் பலராலும் அறியப்படவில்லை, அவ்வோவியன் செய்த தவறென்ன? அவனது படைப்பில் உள்ள பிழை என்ன? இத்தகைய சாயம்போகும் கலைகளின் மீட்சி நிலை உருவெடுக்குமா? 

Wednesday, April 6, 2011

தொலைந்துபோன தேடல்கள்


பொதுவாக நடுத்தட்டு மக்களும் கீழ்த்தட்டு  மக்களும் தங்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் கலை ஆர்வத்தினை பெறுவதற்கோ,அடைவதற்கோ அதிகபடியான ஆர்வம்காட்ட முன் வருவதில்லை.  ஆனால் பண்டைய தமிழனின் வாழ்க்கையானது தட்டுக்கள் என்ற வேறுபாடுகள் அற்ற நிலையையே கொண்டிருந்தன . அவன் படைத்த கலைகளும், ஆற்றல் மிகுந்த விளையாடுக்களுமே பொழுது போக்குகளாகவும் கலை ஆர்வங்கள் ஆகவும்  பறை சாற்றப்பெற்றன. நவீன உலகமானது ஐரோப்பிய  கலாச்சாரங்களும் பண்பாடுமே சாலச்சிறந்தது என்றும்,  கர்நாடக  சங்கீதமே துதிக்கத்தக்கது என்றும் தத்தம்  பிம்பங்களை  விரிக்கத்துவங்கின  . தமிழனின் உணர்வு பொங்கிய ஆற்றல்கள் தலித்திய அடை

யாளங்களாக பார்க்கப்பட்டன. அத்தகைய அழிந்து கொண்டிருக்கும் தமிழனின் பண்பாடு விழுமியங்களினைத் தேடிக்கொண்டிருக்கும் பல இளைஞர்களில் நானும் ஒருவன் சிலம்பம், தப்பாட்டம் (பறை) போன்றவைகளுக்காக நெல்லையில் அலையாத வீதிகள் இல்லை. சொல்லிக்கொடுக்கும் குருநாதர்களை  தொழுவத்திலும்,  நயினார்குளம் சந்தையிலும் கண்டெடுத்தேன், கற்றேன். நேர்த்திகள் யாவும் பரிமாறப்பட்டன. ஆனால் எனது சமுதாயம் கிரிக்கெட் விளையாட்டையும் மேற்கத்திய இசையிடமுமே மயங்கி கிடந்தது. பள்ளி
களும் கல்லூரிகளும் அதையே வழி மொழிந்தன இது ஒரு பக்கம் இருக்க, அமெரிக்க நாட்டில் உள்ள WESLEYAN UNIVERSITY  ல் பறை பதிவு செய்யப்பட்டு பட்டதாரி மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப் படுகிறது. AARON PAIGE என்ற ஆசிரியரால் ஆசிய  நாடுகளின் தொன்மையான  இசைக்கருவிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன அவற்றுள் (பறை) தப்பாட்டம் என்ற பெயரிலேயே வழங்கப் 
படுகிறது. கட்டி காப்பாத்த வேண்டிய நாம் மறந்து கொண்டு இருக்கிறோம் மேலை நாட்டு பல்கலைக்கழகங்கள் அதனை பாடத்திட்டங்களாக மாற்றுகின்றன. ஏன் இத்தகைய நிலை தொலைந்து போன தேடல்களை தேடி அலையும் அவல நிலை மாறுமா?

Thursday, March 24, 2011

பலி ஆடுகள்

தாம் பலி ஆக போகிறோம் என்பதை அறியாத ஆடுகளாக இன்றைய வளரும் நாடுகள் அசை போட்டுக் கொண்டு அலைகின்றன. முதல் ஆடு, ஆசிய நாடுகளில் வரலாற்று புகழ் பெற்ற இந்தியா தான்,பிரிவினை வாதத்தை தூண்டி இரு தரப்பினரிடையே போர் மூளச்செய்த்து, தனது உற்பத்தி பண்டங்களான ஆயுதங்களை விற்பனை செய்யும் முதலாளித்துவ நாடுகள் ஒரு பக்கம். மேலை நாடுகளுக்கு  காவு கொடுக்கும் வகையில் வளரும் நாடுகளின் பொருளாதார திட்டங்கள் மறு பக்கம்.
நகரமயமாதல் எனும் நஞ்சு நாடு முழுவதும்  பரவதொடங்கி  வெகு காலம்  ஆகிறது.  நாட்டின் அரசியல் நிகழ்வானது  தன் உடலையே தான் உண்ணும் விந்தையாக மாறி இருப்பதை  இங்கு ராணுவத்திற்கும் புரட்சியாளர்களுக்கும் இடையேயான போராட்டங்கள் முன் வைக்கின்றன. மக்கள் எதையுமே சிந்திக்க விடாத வகையில் இலவசத் திட்டங்கள். எவனை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் வேறு. தனது தனித்தன்மையை மெல்ல மெல்ல இழக்கும் மொழிகளின் பரிதாப நிலை வேறு. உற்பத்தியாளர்களாக இருந்தவர்கள் வாடிக்கையாளர்களாக மாறும் நிலை. கதறி அழும் விவசாயிகள், மாற்று  தொழில் தெரியாத மீனவர்கள், ஒரு ஓட்டிற்கு ஒரு வேளை உணவாவது கிடைக்காதா என ஏங்கும் வாக்காள பெருமக்கள், வேலை வெட்டிகளை விட்டு விட்டு வேட்பாளர் பின் சுற்றும் ரத்தத்தின் ரத்தங்கள்,  சுய தேவைகளை பூர்த்தி செய்ய தலைவர்கள் பின் அலையும் கழக உடன் பிறப்புகள், கொள்கைகளை கூட மனபாடம் செய்யத்  தெரியாத கட்சியின் வேட்பாளர்கள்,  கேலி கூத்திற்கு இடமளிக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரங்கள்  
கவர்ச்சியான பிரச்சார பீரங்கிகள், ம்ம்ம்ம் ........
எனக்கான தலைவனை தேர்ந்தெடுக்கும் நிலை மாறி தமக்கான தலைவனைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வாக்களிப்போம் ஆடுகளாய் அமையாமல் மனிதர்களாய் உயர்வோம்.